No Result
View All Result
  • Login
Justfit.lk - Learn about Fitness Strategies and Nutrition Plans
  • Featured
  • Fitness
  • Food & Diet
  • Life Style
  • Muscle Building
  • Nutrition
  • Sports
  • Workout
  • Featured
  • Fitness
  • Food & Diet
  • Life Style
  • Muscle Building
  • Nutrition
  • Sports
  • Workout
No Result
View All Result
Justfit.lk - Learn about Fitness Strategies and Nutrition Plans
No Result
View All Result
ADVERTISEMENT
Home fitness influencers

இலங்கையின் 2021 ஆண்டில் வளர்ந்துவரும் மிகச்சிறந்த 25 உடற்பயிற்சி வல்லுனர்கள் மற்றும் உடற்கட்டுக்கோப்பு பயிற்சியாளர்கள்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்கப்படுத்தும் இலங்கையின் மிகச்சிறந்த உடற்பயிற்சி வல்லுனர்கள் மற்றும் உடற்கட்டுக்கோப்பு பயிற்சியாளர்கள்

Raymicka Ben by Raymicka Ben
செப்டம்பர் 6, 2021
in fitness influencers
Reading Time: 7 mins read
456 13
A A
0
312
SHARES
18.6k
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

This post is also available in: English Sinhala

நாங்கள் 2021ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். எம்மில் பலர் “புதிய புத்தாண்டு, நானும் புதிது” எனும் உற்சாகமான கொள்கையோடு பயணிக்க உள்ளோம். ஆகையால், உங்களுக்காக சில செயற்பாடுகளை இன்னும் கொஞ்சம் எளிதாக்க நினைத்துள்ளோம். நீங்கள் உங்கள் புது வருடத்தில் சில தீர்மானங்களை புதிதாக செயற்படுத்தும் ஆர்வமுள்ளவர் எனில், அல்லது உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மற்றும் கட்டுடல் உடற்தகமையையும் மேம்படுத்த விரும்புபவர் எனில், உங்களுக்காக ஒரு சிறந்த உதாரணப் புருஷராகவும், தனிநபர் பயிற்றுநராகவும் அல்லது உங்களின் உடற்பயிற்சி பயணத்திற்கான ஊட்டச்சத்து நிபுணராக இருக்க கூடிய “இலங்கையின் மிகச்சிறந்த முதல் 25 கட்டுடல் உடற்தகுதி வல்லுனர்கள்” பட்டியலை தொகுத்துள்ளோம்.

பொறுப்பு துறப்பு:

இந்த பட்டியலில், நாங்கள் இலங்கையின் மிகச்சிறந்த உடற்தகுதி வல்லுநர்களை தேர்ந்தெடுத்துள்ளோம். அவர்கள் தங்களை பின்தொடரும் மக்களுக்கு தங்களின் உடற்பயிற்சி வீடியோக்கள், உடற்பயிற்சி குறிப்புகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையைக் கடைபிடிக்க தேவையான குறிப்புகளை வழங்குவதன் மூலம் உற்சாகமான ஆரோக்கியமான வாழ்வை, ஊக்குவிக்கிறனர். மற்றும் ஒருசிலர் மக்களிடத்தில் ஊக்குவிக்கும் நபர்களாக மிளிர்கின்றனர். நாட்டின் முன்னணி விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பிராண்டுகளுடன் கைகோர்த்து, இவ் உடற்தகுதி வல்லுநர்களும் மிக உற்சாகமாக தங்களுக்கு விருப்பமான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் உபகரணங்கள், ஊட்டச்சத்துக்கள் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள். அது அவர்களைப் பின்தொடர்பவர்களுக்கு தங்களுக்கு மிகப்பொருத்தமான உடற்பயிற்சி உபகரணங்களைத் தேர்ந்தெடுக்க உதவுகின்றது. நீங்கள் ஜிம் செல்பவரோ அல்லது, வீட்டில் உடற்பயிற்சி செய்பவரோ, கீழ் பட்டியல் படுத்தப்பட்டுள்ள இலங்கையின் உடற்தகுதி வல்லுநர்கள், உங்கள் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி பயணத்தை இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சிகரமானதாக மாற்றுவார்கள்.

எனவே, இன்னும் தாமதப்படுத்தாமல், இங்கே 2021ம் ஆண்டில் நீங்கள் பின்தொடர வேண்டிய இலங்கையின் மிகச்சிறந்த முதல் 25 உடற்தகுதி வல்லுநர்களைக் காணலாம்.

இலங்கையின் மிகச்சிறந்த முதல் 25 கட்டுடல் உடற்தகுதி வல்லுனர்கள்

1. லூசியன் புஷ்பராஜ்

lucian-pushparaj-sri-lankan-fitness-influencers


“ஆசியாவின் கருப்பு சிங்கம்” என்று அறியப்படுகின்ற லூசியன் புஷ்பராஜ் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள ஓர் இலங்கை ஆண் தொழில்முறை உடல்கட்டழகர் ஆவார். மற்றும் 2017 இல் அவர் ஆசியா தழுவிய உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றார். மற்றும் 2018 டிசம்பர் 16 ஆம் திகதி அன்று உலக உடல் கட்டழகர் சாம்பியன்ஷிப் மகுடத்தை வெல்வதற்காக முதல் இலங்கையராக அவர் சென்றிருந்தார். மேலும் லூசியன் 2019 மார்ச் மாதம் நடைபெற்ற News First Platinum விருது விழாவில் ஆண்டின் பிரபல தடகள விளையாட்டு ஆளுமையாளர்களில்  ஒருவராக பரிசளித்து கௌரவிக்கப்பட்டார். அவர் Fitness island Store இன் பிராண்ட் பிரதிநிதியும் ஆவார். மற்றும் லூசியன் உடற் கட்டமைப்பில் ஈடுபடும் இலங்கை இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமளிப்பவர்களில் ஒருவராகவும் காணப்பட்டுவருவதுடன், அவர் தொடர்ந்தும் தனது சமூக வலைத்தளங்கள் மூலம் அவரைப் பின்தொடர்பவர்களை ஊக்குவிப்பளித்து கவர்ந்து வருகின்றார்.

2. ராண்டி செனவிரத்ன

randy-senevirathne


ராண்டி செனவிரத்ன ஒரு உடற்பயிற்சி தடகள வீரரும், உடற்தகுதி மாடலும், பழுதூக்கல் வீரரும் மற்றும் 13 வருட கால அனுபவம் கொண்ட சான்றளிக்கப்பட்ட உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளரும் ஆவார். மேலும் அவர் Karate-Do கூட்டமைப்பில் முதலாவது டான் (Black Belter) பெற்றவரும் ஆவார். அவர் Mr Perfect, Mr Physique, Mr Heman (70kg), Mr Sri Lanka (70kg), Mr Junior Sri Lanka , Men Physique Sri Lanka, மற்றும் Mr Western Province (மேற்கு மாகாணம்) போன்ற பல மகுடங்களை தனதாக்கியுள்ளார். மேலும் இவர் Supplementfactory.Lk நிறுவனத்தில் ஒரு தடகள வீரரும் மற்றும் Osmofitness நிறுவனத்தின் ஒரு பிரதிநிதியும் ஆவார். மற்றும் ராண்டி செனவிரத்ன Muscle Cafe இன் ஸ்தாபகராகவும் உள்ளார். இது உடற்பயிற்சி ஆலோசனை மற்றும் பிற உடற்பயிற்சி சேவைகளை வழங்குகிறது. மேலும் அவர் Train With Randy என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலையும் தயாரித்துள்ளார். அதன் மூலம் அவர் தன்னை பின்தொடர்பவர்களுக்கு உடற்பயிற்சி தொடர்பான பிரதான குறிப்புகளை வழங்கிவருகின்றார்.

3. யொஹான் சேத் பெரேரா

yohan-seth-perera


யொஹான் சேத் பெரேரா ஓர் உடற்பயிற்சி தடகள வீரரும், 10 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் வாய்ந்த வலிமையூட்டும்பயிற்சியாளரரும் ஆவார். அவர் ICN India Physique Novice மகுடத்தை வென்றுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் ஃபீட்டை உள்ளே சென்று பார்வையிடும்போது அவை அவரது கட்டுமஸ்தான உடல் வாகையும் திறமான உடலையும் சிறப்பாக வடிவமைத்து பேணுவதற்காக அவர் செய்த முயற்சிகளையும் கடின உழைப்பையும் உங்களை உணரவைக்கும். யொஹான் தனது யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தன்னை பின்தொடர்பவர்களுக்கு நிகழ்நிலை(online) உடற்தகுதி பயிற்றுவிப்பை வழங்குகிறார். அது அவர்களை தங்களது உடற்பயிற்சி பயணத்தில் தொடர்ந்திருக்க ஊக்கப்படுத்துகிறது. மேலும், அவரது நேர்மறையான மனநிலையால், அவர் இலங்கையிலுள்ள பல இளைஞர்களை கவர்கின்றார்.

4. ஹயா கொடித்துவக்கு

gaia-kodithuwakku


ஹயா கொடித்துவக்கு ஒரு தகுதிவாய்ந்த உடற்பயிற்சி, சுகாதார பயிற்றுனர் மற்றும் உடற்தகுதி மாடலும் ஆவார். அவர் நாட்டின் மிகச்சிறந்த உடற்தகுதி வல்லுநர்ளில் பெயர்போனவரும் சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிகுந்தவர்களில் ஒருவருமாவார். மற்றும் IFBB MUSCLE BEACH BALI 2018 இல் ஹயா மிகச்சிறந்த முதல் 4 போட்டியாளர்களில் ஒருவராவர். மேலும் ஹயா கொடித்துவக்கு நாட்டில் பல பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரு நிலைமாற்றுத்திறன் மிக்க பயிற்றுநரும் ஆவார். அவர் இலங்கையில் மிகப்பெரிய பெண் உடற்பயிற்சி- இயங்கும் தளத்தை வைத்திருக்கிறார். ஹயா தனது வாடிக்கையாளர்களுக்கு நிகழ்நிலை(Online) பயிற்சியை வழங்குவதுடன் தனது வாடிக்கையாளர்களையும் மற்ற பெண்களையும் தனது வியக்கத்தகு உடல் உள ஆரோக்கியம் சார்ந்த விடயங்கள் மூலம் ஊக்குவிக்கின்றார். மேலும் ஹயாவின் இன்ஸ்டாகிராம் நிறைய ஊக்கமளிக்கும், ஈடுபாட்டை அதிகரிக்கும் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான விடயங்களை அறிவூட்டும் இடமாக நிரம்பியுள்ளது. மேலும், அவர் இலங்கையில் My Protein இன் ஒரே முகவரான Protein.lk போன்ற நிறுவன பிராண்டுகளுடனும் பணியாற்றியுள்ளார்.

5. துளங்க ஹெட்டியாராச்சி

dulanga-hettiarachchi


துளங்க ஹெட்டியாராச்சி உடல் கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை விரும்பும் ஒரு உடற்பயிற்சி தடகள வீரராவார். அவர் Novice 2018 இல் இலங்கையில் 3 வது இடத்தைப் பெற்றார். மேலும், ஹெட்டியாராச்சி Supplementfactory.lk இல் ஒரு தடகள விளையாட்டு வீரரும் ஆவார். தனது யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அவர் தனது அறிவு மற்றும் அனுபவங்களை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள  உதவும் உயர் நோக்கில் பகிர்ந்து கொள்கிறார். அவர் தனது சமூக வலைத்தள கணக்குகளைப் பயன்படுத்தி தினசரி புதிய எடுத்துக்காட்டுகளை பதிவிடுவதனால் அவரைப் பின்தொடர்பவர்களில் பலரை உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட ஊக்குவிக்கின்றார். அவரது உடல்பயிற்சி வீடியோக்கள் உங்களை பிரமிக்க வைத்து உங்களுக்கு உடனடியாக அட்ரினலின் துரித உற்சாகத்தை அளிக்கின்றது. உண்மையாக, அவர் இலங்கையில் உள்ள பல இளைஞர்களுக்கு உத்வேகமாகவும் இலங்கையின் பிரபலமான உடற்பயிற்சி வல்லுநர்களில் ஒருவராகவும் மிளிர்கின்றார்.

6. ஸுரி (Zurifitnessofficial)

zuri-sri-lankan-fitness-influencers


ஸுரி ஒரு உடற்பயிற்சி தடகள விளையாட்டு வீரர் மற்றும் ஒரு உடற்தகுதி மாடலும் ஆவார். அவர் zfstore.lk இன் நிறுவனர் ஆவார். இலங்கையில் உள்ள ஒரு ஊட்டச்சத்து பொருட்களுக்கான  (supplemments) அங்காடியான அங்கே நீங்கள் பரந்த அளவிலான நம்பிக்கைக்குரிய உலகத் தரம் வாய்ந்த பிராண்டுகளைக் காணலாம். மற்றும் ஸுரி இலங்கையின் அதிசிறந்த உடற்பயிற்சியாளர்களில் ஒருவரும் மற்றும் இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு மிகுந்தவர்களில் ஒருவரும் ஆவார். ஸுரி தனது சமூக வலைத்தளங்களில் உடற்பயிற்சி மற்றும் உடற்தகுதிக்கான தனது ஆர்வத்தை வெளிப்படுத்துகையில், பல மக்கள் அவரது உடற்பயிற்சி சார் அறிவு மற்றும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அவரது சமூக வலைத்தளங்களைப் பின்தொடருகிறார்கள். நிச்சயமாக, ஸுரி ஆரோக்கிய வாழ்க்கை முறையை பின்பற்ற விரும்பும் இலங்கை இளைஞர்களுக்கு ஒரு சிறந்த உத்வேகமாக காணப்படுகிறார்.

7. லலித எபராச்சி

lalitha-epaarachchi


லலித ஒரு ஆர்வமிகுந்த உடற்பயிற்சி இன்ஸ்டாகிராமரும் உடற்பயிற்சி பயிற்றுநரும் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலரும் ஆவார். அவர் தனது YouTube மற்றும் சமூக வலைத்தளங்களில் உடற்பயிற்சி கல்விசார் விடயங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் வெளியிடுகிறார். அது மக்களை நேர்மறையாக செல்வாக்குச் செலுத்துகிறது. மேலும் லலித எபராச்சி நிகழ்நிலை உடற்பயிற்சி பயிற்றுவிப்புக்காக வாடிக்கையாளர்களைப் உள்வாங்குகிறார். மேலும் அவர் தற்கால இலங்கையர்களுக்கான வஷன் பிராண்டான Goyo.lk மற்றும் TORO Casuals போன்ற பிராண்டுகளுடன் பணியாற்றியுள்ளார். லலித தன்னைப் போன்ற ஒரு உறுதியான மற்றும் கட்டுமஸ்தான உடலைப் பெற விரும்பும் மக்களுக்கு வழிகாட்டுவதற்கும் உதவவுவதற்கும் ஆர்வமும் முயற்சியும் எடுக்கிறார். இந்த நோக்கத்திற்காக, அவர் தனது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக்கொண்டிருப்பதுடன் மேலும், இலங்கையின் மிகச்சிறந்த உடற்பயிற்சி வல்லுநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

8. ஃபாசில் மரிஜா

fazil-marija


ஃபாசில் மரிஜா இலங்கையின் முன்னாள் றக்பி பிரதான வீரர் ஆவார். மற்றும் அவர் இலங்கையின் மிகச்சிறந்த றக்பி யூனியன் வீரர்களில் ஒருவராகவும் ஆசியாவின் சிறந்த வீரர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். அவர் கண்டி விளையாட்டு கழகத்தின் தற்போதைய தலைமை பயிற்சியாளராகவும் இலங்கையின் முதல் ரக்பி முன்பள்ளியாக கருதப்படும் பள்ளியின் ஸ்தாபகரும் ஆவார். நாட்டில் பிரபலமான விளையாட்டு வீரரான இவர், விளையாட்டு மற்றும் உடற்தகுதி போன்றவற்றில் ஈடுபாடுள்ள பல இலங்கை இளைஞர்களுக்கு ஒரு அடையாளமாகவும் ஊக்கமளிப்பவராகவும் உள்ளார். மேலும், அவரது தன்னம்பிக்கை, ஆளுமை மற்றும் திறமை போன்றன அவரை இலங்கையின் சிறந்த உடற்பயிற்சி வல்லுநர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது.

9. ஜே.கே அரியகுணராஜா

jk-rajah


ஜே.கே.ராஜா வட இலங்கையின் மிகப்பெரிய ஜிம்களில் ஒன்றாக கருதப்படும் JK Fitness இன் உரிமையாளரும் SLBBFF சான்றளிக்கப்பட்ட உடற்பயிற்சி பயிற்றுநரும் ஆவார். அத்தோடு, அவர் வடக்கில் மிக முக்கியமான உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராக கணக்கிடப்படுகிறார். மற்றும், ஜே.கே.ராஜா இலங்கை உடற்கட்டமைப்பு மற்றும் உடற்பயிற்சி கூட்டமைப்பின் வட மாகாண அமைப்பாளரும் ஆவார். மேலும், ஜே.கே. ராஜா இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள பல இளைஞர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பரிந்துரைக்கிறார். அவர் நிச்சயமாகவே வடக்கில் மிகப்பிரபலமான ஆண் உடற்பயிற்சி வல்லுநர்களில் ஒருவராவார். அவரது சமூக வலைத்தள இடுகைகளில் பயிற்சி வீடியோக்கள், உடற்பயிற்சி எப்படி செய்வது என கற்பிக்கும் வீடியோக்கள் மற்றும் அவரது தனிப்பட்ட உடற்பயிற்சிகளின் புகைப்படங்கள் என்பவற்றைப் பார்க்கலாம் மற்றும் இந்த இடுகைகள் அவரை பின்தொடர்பவர்களை, குறிப்பாக இளைஞர்களை உடற்பயிற்சி செய்ய தூண்டுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதன் மூலம், தினமும் குறைந்தது ஒரு புதிய நபரையாவது உடற்பயிற்சியில் ஈடுபட வைக்க தான் விரும்புவதாக ஜே.கே.ராஜா கூறுகிறார்.

10. தர்ஜா டி சில்வா

tarja-de-silva


தர்ஜா டி சில்வா ஒரு ஜூம்பா மற்றும் டான்ஸ்ஃபிட் நடனக்கலை பயிற்றுவிப்பாளர் ஆவார் (Zumba and DanceFit instructor). (இது ஹிப்-ஹாப், லத்தீன் மற்றும் உயர் கார்டியோவுடன் கலந்து இணைந்த ஒரு நடன வடிவம்). இவர் இங்கிலாந்தில் இருந்து தனது ஜூம்பா நடனக்கலை தகுதியை பெற்றார். மேலும், அவர் 13 வயதளவில் நடனமாட ஆரம்பித்த ஒரு Ballroom நடனக் கலைஞர் ஆவார். தர்ஜா #TAfitnesslk இன் இணை ஸ்தாபகர் ஆவார். அங்கே அவர் மக்களுக்கு டான்ஸ்ஃபிட் நடனக்கலையை பயிற்றுவிக்கிறார். மற்றும் மக்கள் தங்கள் சொந்த வீடுகளின் சௌகரியமாக பயிற்சி செய்ய, தர்ஜா நிகழ்நிலை பயிற்சிகளை வழங்குகிறார். இவை அனைத்தும் தர்ஜாவை இலங்கையின் புகழ் மிக்க  உடற்பயிற்சி வல்லுநர்களில் ஒருவராக உருவாக்கியுள்ளது. மேலும், தர்ஜாவின் நடன அசைவுகளை புரிந்துகொள்ள, அவரது இன்ஸ்டாகிராம். கணக்கை பின்தொடரும் மக்கள் அதிகம்.

11. ஹசித ரேமண்ட்

hasitha-raymond


ஹசித ரேமண்ட் ஒரு வலிமை மற்றும் உடல் சீரமைப்பு பயிற்சியாளர். அவர் உடற்பயிற்சி மற்றும் தனிப்பட்ட பயிற்சிக்கான நாட்டின் முன்னணி உடற்பயிற்சி ஸ்டுடியோக்களில் ஒன்றாக திகழும் Kinetic Fitness இணை நிறுவனரும் மற்றும் தலைமை பயிற்றுநரும் ஆவார். ஹசித 10 வருடங்களுக்கும் மேலாக உடற்பயிற்சி தொழிற்துறையில் இருந்து வருகிறார். சர்வதேச விளையாட்டு அறிவியல் சங்கத்தால் உடல் வலிமை மற்றும் சீரமைப்புக்கான தனிப்பட்ட பயிற்சியாளராக தகுதி பெற்றார். மேலும், உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராக, அவர் எமது நாட்டில் பல உடற்பயிற்சி தடகள விளையாட்டு வீரர்களுக்கும் மற்றும் பிரபலங்களுக்கும் உடற்பயிற்சியை பயிற்றுவித்துக்கொண்டிருக்கிறார். உடல் தகுதி மற்றும் நல்வாழ்வில் அவரது நிபுணத்துவம் அவரை இலங்கையின் மிகச்சிறந்த உடற்பயிற்சி வல்லுநர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது.

12. ஜூலியா (Juliyahofficial)

juliyah


ஜூலியா ஓர் இலங்கை உடற்பயிற்சி மாடலும் மற்றும் ஒரு பெண் கட்டுடல் உடற் தகுதியாளரும் ஆவார். பெண்களுக்கான 63kg எடைக்கான பழு தூக்கல் போட்டியில் முக்கிய இடம்பிடித்த வெற்றியாளராகவும் திகழ்கிறார். அவரது பல்வேறு உடற்பயிற்சிசார் பயிற்சி நுட்பங்கள் உடலமைப்புடனும் வலிமையுடன் இருக்க உதவியது. மற்றும் அவர் தினமும் தனது பெருமளவான இன்ஸ்டாகிராம் பார்வையாளர்களை தனது ஆரோக்கியமான மற்றும் வலிமையான உடலமைப்பின் மூலம் கவருகின்றார். ஜூலியா தனது இன்ஸ்டாகிராமில் 103k ஆயிரம் விசுவாசமிக்க பின்தொடர்பவர்களைக் வைத்திருக்கிறார் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஜூலியா போன்ற சாதிக்கும் திடவுறுதி கொண்ட எவரும் அற்புதமான அவரது உடற்பயிற்சி குறிப்புகளைப் பெற அவரைப் பின்தொடரலாம். அவர் உடற்தகுதி மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை மீதான ஆர்வம் கொண்டவர் என்பதை அவரின் சமூக வலைத்தளப் பதிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

13. பாக்யா டெனிஷியஸ் மெண்டிஸ்

baghya-denishious-mendis


பாக்யா டெனிஷியஸ் மெண்டிஸ் ஒரு உடற்பயிற்சி ஆர்வலரும் உடற்பயிற்சி தடகள விளையாட்டு வீரரும் ஆவார். பாக்யா தனது வலிமையான உடலால் புகழடைந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பல உடற்பயிற்சிசார் குறிப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பாக்யா எவ்வாறு ஆளுமையை மேம்படுத்துவது மற்றும் சுயநம்பிக்கையுடன் இருப்பதற்கான குறிப்புகளையும் வழங்குகிறார். அது தவிர, அவர் ஆண்கள் தங்கள் உடலை எளிதாக பயிற்சி செய்வதற்கான வழிகாட்டலையும் வழங்குகிறார். ஆகையால், இப்போது 31k ஆயிரம் விசுவாசமிக்க பல இலங்கையர்கள் தங்கள் உடற்பயிற்சிக்கான ஊக்கத்தைப் பெற அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.

14. லியோ இன்ஸ்ய்

lilleo-inzy


லியோ இன்ஸ்ய் ஒரு உடற்பயிற்சி மாடலும் ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளரும் ஆவார். அவர் Mr. Sri Lanka 2019 ன் மகுடத்தை வைத்திருப்பவரும் Mr. British Empire போட்டியில் இரண்டாம் இடத்தையும் தனதாக்கிக்கொண்டவரும் ஆவார். லியோ தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிகாட்டி இலங்கையின் பிரபல ஆண் உடற்பயிற்சி வல்லுநர்களில் ஒருவராகவும் ஆகினார். மற்றும் அவரது 13.2k ஆயிரம் நம்பக்கைக்குரிய பின்தொடர்பாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் ஆனார். லியோவின் இன்ஸ்டாகிராம் கணக்கை பலர் அவரது தினசரி வாழ்க்கை மற்றும் உடற்பயிற்சி முறை வழக்கத்தைப் பார்வையிட பின்தொடர்கின்றனர். மற்றும் அவர் நீங்கள் எதிர்பார்க்கும் உடல்தகுதியை அடைவதற்கான பயிற்சிக் குறிப்புக்களையும் வழிகாட்டல்களையும் வழங்குகிறார். அவர் தங்களுடைய பிரத்யேக பயிற்சிகளில் முனைப்புடன் ஈடுபாடு காட்டுபவர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறார். இதனால், அவர் இலங்கையின் பிரபலமான உடற்பயிற்சி வல்லுநர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

15. ஸர்ராணி திலகரத்ன

sarrani-tillakaratne


ஸர்ராணி திலகரத்ன ஓர் உடற்தகுதி பயிற்றுநரும் உடற்பயிற்சி மாடலும் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலரும் ஆவார். அவரைப் பொறுத்தவரை, எல்லாவற்றிலும் சரியான அடைவுகளைப் பெற வேண்டுமாயின் உங்களால் முடியுமான சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதாகும். அது தவிர, ஸர்ராணியின் பொருத்தமான உடல்வாகு, நல் ஆரோக்கியம் என்பன உடற்தகுதிக்கான ஓர் சிறந்த உதாரணமாகும். @Physique.by.sari என்று அழைக்கப்படும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஊடாக, அவர் தனது உடற்பயிற்சி நாட்குறிப்புகளை பகிர்ந்துகொள்கின்றார். அவை பல இலங்கையர்கள், குறிப்பாக பெண்கள் உடற்தகுதி பெற உந்துதலையும் ஊக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. அத்துடன் 42.2k ஆயிரத்திற்கும் அதிகமான விசுவாசமுள்ள பின்தொடர்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் அவர் மிகச்சிறந்த இலங்கை பெண் உடற்தகுதி வல்லுநர்களின் ஒருவராகவும் திகழ்கின்றார்.

16. DR பந்துல பஸ்நாயக்க

doctor-pandula-basnayake


வைத்தியர் பந்துல பஸ்நாயக்க இலங்கையின் மிக அழகான மருத்துவர் என்று அழைக்கப்படுகிறார். அதை நாம் மறுக்க முடியாது. அவர் ஒரு வைத்தியராக இருந்தபோதிலும், அவர் உடற்கட்டமைப்பை பேணுவதிலும் மற்றும் கட்டுடல் மாடலிங் செய்வதிலும் ஆர்வம் கொண்டவராவார். அவர் தனது வாழ்க்கையில் உடற்பயிற்சியைத் இணைத்துக்கொள்ள முடிவு செய்தார், அதனால் அவருக்கு ஒர் ஆரோக்கியமான வாழ்க்கையை பேண முடியுமாக உள்ளது. நாம் அவரை உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு வல்லுநராக மாறிய ஒரு மருத்துவர் என்று உறுதியாக கூறலாம். அவரின் உடற்தகுதி மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கான ஆர்வம் அவரது அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவுகளால் வெளிப்படுகின்றது. அவை நிச்சயமாக அவரைப் பின்தொடர்பவர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னெடுக்க ஊக்குவிக்கிறது.

17. புத்திஹ ரிஹான் (Buddikarihan)

buddikarihan


புத்திஹ ரிஹான் ஒரு விளையாட்டு மற்றும் உடற்தகமை பயிற்றுனர் ஆவார். அவர் விளையாட்டு மற்றும் கட்டுடல் உடற்தகுதியில் HND கற்கையையும் பூரணப்படுத்தியுள்ளார். Kickboxing All Island சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களையும், 74Kg தேசிய பழு தூக்கல் போட்டி மற்றும் All Islands Bench Meet போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார். அவரது உடற்பயிற்சி மையத்தில், அவர் பல உடற்பயிற்சி தடகள வீரர்களுக்கு உடற்பயிற்சி பயிற்றுவிப்பை அளித்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம், உடற்பயிற்சி மற்றும் உணவின் அடிப்படையிலான ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க பல இலங்கையர்களை தூண்டுகிறார். எளிமையாகச் சொன்னால், அவர் உடற்பயிற்சியை நேசிப்பதுடன் அனைவரையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழவும் ஊக்குவிக்கிறார்.

18. தனுஸ்க சந்தநுவன்

dhanushka-sandanuwan


தனுஸ்க சந்துநுவன் சர்வதேச ரீதியாக சான்றளிக்கப்பட்ட கட்டுடல் உடற்தகுதி பயிற்றுனர் (SLBBF) ஆவார். அவர் Sri Lanka Expo Men’s Physique championship, Mr. Sri Lanka Physique Championship மற்றும் Mr. Novice 2016 championship ஆகிய மகுடங்களை தக்கவைத்துள்ளார். மற்றும் அவர் தனது கட்டுடலமைப்புக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடர்வதன் மூலம் அவரது தினசரி உடற்பயிற்சி செயற்பாடுகளை பலரும் பார்வையிடுகிறார்கள். அவரின் இன்ஸ்டாகிராம் ஊட்டங்கள் வலிமையான உடற்கட்டமைப்பை உருவாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் கடின உழைப்பைக் காட்டுகின்றன. அது மட்டுமன்றி, தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளில், அவர் எப்படி உடற்பயிற்சிகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலக்கலாம் என்பதையும் விளக்குகிறார். இக் காரணிகள் அனைத்தும் அவரை இலங்கையின் பிரபலமான உடற்தகைமை வல்லுநர்களில் ஒருவராக உருவாக்கியுள்ளது.

19. ஹலித் ஒஸேன்

khalid-ossen


ஹலித் ஒஸேன் ஒரு கட்டுடல் உடற்தகுதி பயிற்றுனரும், தடகள விளையாட்டு வீரரும், கட்டுடல் உடற்தகுதி மாடலும் ஆவார். Supplementfactory.lk இல் ஒரு விளையாட்டு வீரராகவும் bkmodelmanagement இல் ஒரு கட்டுடல் மாடலாகவும் மிளிர்கிறார். அவர் கட்டுடல் உடற்தகுதிப் பயிற்றுவிப்புடன் சேர்த்து, நிகழ்நிலையில் (Online), மக்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி திட்டங்களையும் வழங்குகிறார் மற்றும் அவரது Instagram, YouTube சேனல்கள் மூலம் உடற்பயிற்சி தகவல்கள், உதவிக்குறிப்புகள் மற்றும் உந்துதல்களையும் வழங்கி வருகிறார்.. பல மக்கள் வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி தொடர்பான விடயங்களைப் பெற அவரது சேனல்களை பின்தொடர்கின்றனர். ஹலித் தங்கள் தடைகளை உடைத்து தாம் விரும்பியதைச் செய்ய விரும்புகின்றர்களுக்கான சிறந்த ஊக்குவிப்பாளராக இருக்கிறார். எனவே, இவரின் இந்த முயற்சிகள் அனைத்தும் அவரை இலங்கையின் மிகச்சிறந்த கட்டுடல் உடற்தகுதி வல்லுநர்களுள் ஒருவராக ஆக்கியிருக்கிறது.

20. தீபக் சண்முகநாதன்

deepak-shanmuganathan


தீபக் சண்முகநாதன் ஆண்கள் உடற்தகுதி திட்டங்களில் ஈடுபாடுள்ள ஒரு இலங்கை கட்டுடல் உடற்தகமை மாடல் ஆவார். தீபக் ஆர்வமாக உடற்தகுதி துறையில் ஈடுபாடுகாட்ட முடிவு செய்தார். அதனால் அவர் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள முடிந்தது. அவர் ஒரு கட்டுடல் உடற்கட்டமைப்பைக் கொண்டவர். தீபக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் உடற்பயிற்சி வழிகாட்டல் மாத்திரமன்றி உணவுக்கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகளையும் அவரை பின்தொடர்பவர்களுக்கு வழங்கி வருகிறார். அவர் தனது உடல்நலம் மற்றும் உடற்தகுதி பயிற்சிகளை கடுமையாக மேற்கொண்டு வருகிறார்.

21. மதுஷன் ஷவிந்த

madushan-shavinda


மதுஷன் ஷவிந்த ஒரு கட்டுடல் தடகள வீரரும் தனிநபர் உடற்தகுதி பயிற்றுனரும் உடற்பயிற்சி வல்லுனரும் ஆவார். மற்றும் அவர் Mr. Sri Lanka Junior 2019, Mr. Novice Junior Overall 2019, Mr. Iron Man Overall 2017 போன்ற மகுடங்களை வென்றுள்ளார். மதுஷனின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் தங்களை சவாலுக்குட்படுத்துவதன் மூலம் அவர்களின் உடலை மாற்றவும் சரியான முறையில் பயிற்சியை மேற்கொள்ளவும் மக்களை ஊக்குவிக்க கூடியதாக உள்ளன. எளிமையாகச் சொன்னால், அவரைப் பின்பற்றுபவர்கள் தங்களுடைய தனிப்பட்ட உடற்தகுதி இலக்குகளை அடைய சாத்தியமான சிறந்த உடற்பயிற்சி குறிப்புகளை வழங்கி தொடர்ந்தும் ஊக்குவிக்கிறார். அத்தோடு, அவர் ஊக்குவிக்கும் முறையை நீங்கள் முற்றிலும் விரும்புவீர்கள்.

22. நிபுனி வில்ஸன்

nipuni-wilson


நிபுனி வில்ஸன் ஒரு இலங்கை நடிகையும், கட்டுடல் உடல்தகுதி மாடலும், சான்றளிக்கப்பட்ட ஜூம்பா நடனக்கலை பயிற்றுவிப்பாளரும் ஆவார். நிபுனி பெண்கள் தாங்கள் ஆரோக்கியமானவர்களாக மற்றும் மகிழ்ச்சியானவர்களாக மாற Zumba நடனத்தையும் உடற்தகுதி பயிற்சியையும் பயன்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கிறார். மற்றும் அவர் தனது மிகப்பெரும் இன்ஸ்டாகிராம் கணக்கை பெண்கள் தங்கள் உடலை மாற்ற உதவக்கூடிய உடற்பயிற்சி குறிப்புகள் மற்றும் ஊக்கப்படுத்தல் விடயங்களை பகிர்ந்து கொள்ள பயன்படுத்துகிறார். நிபுனி ஒரு உடற்தகுதி மற்றும் ஆரோக்கிய வாழ்வு வல்லுநராக மாறிய ஒரு நடிகை ஆவார். அவரது உடற்பயிற்சி நாட்குறிப்புகள் இலங்கையிலுள்ள மில்லியன் கணக்கான மக்களை ஊக்குவிக்கின்றன. நாளுக்கு நாள் அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், அவர் மிகச்சிறந்த இலங்கை கட்டுடல் உடற்தகுதி பெண் வல்லுநர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

23. மெலீஸா லிட்ச்

meliza-leitch


மெலீஸா லிட்ச் ஒரு கட்டுடல் உடற்தகுதி மாடலும் உடற்பயிற்சி ஆர்வலரும் ஆவார். மற்றும் அவர் இலங்கை சட்டத்துறை LLB & LLM பட்டம் பெற்று இப்போது, ​​சிங்கப்பூரில் பணி புரிகின்றார். மெலீஸாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் YouTube கணக்குகள் உடற்பயிற்சி, உடல்நலம் மற்றும் உணவு குறிப்புகள் வழங்கும் ஊடகமாக உள்ளது. இவை அவரை நிகழ்நிலை (online) சமூகத்தில் மிகவும் பிரபலமாக்கியுள்ளது. மெலிஸாவின் நம்பிக்கை, ஆளுமை மற்றும் திறமை அவரை இலங்கையின் மிகச்சிறந்த உடற்பயிற்சி வல்லுநர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது என்பதை நாங்கள் மறுக்க முடியாது. அவர் இலங்கையில் உள்ள இளம் பெண்களுக்கு ஒரு சிறந்த உத்வேகத்தை அளித்துவருகின்றார்.

24. நலித் அத்துகொரள

nalith-athukorala


நலித் அத்துகொரள ஒரு கட்டுடல் உடற்தகுதி மாடலும் நிகழ்நிலை உடற்தகுதி பயிற்சியை வழங்கும் பயிற்றுநரும் ஆவார். கட்டுடலமைப்பு மற்றும் உடற்பயிற்சி பயிற்சிகளினால், அவர் பலரை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற ஊக்குவிக்கிறார். நலித் தனது உடற்தகுதிசார் விடயங்களை பகிர்வதன் மூலம் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களை (Followers) உருவாக்கியுள்ளார். மேலும், நலித் இலங்கையின் முக்கிய கட்டுடல் உடற்தகுதி ஜாம்பவான்களில் ஒருவராகவும் அதேபோன்று நாட்டில் பல இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பவர்களில் ஒருவராகவும் மிளிர்கின்றார்.

25. ருக்ஸலா அல்விஸ்

rukshala-alwis


ருக்ஸலா அல்விஸ் இலங்கையில் பிறந்த பெண் உடற்தகுதி மாடலும் தகுதிவாய்ந்த உடற்பயிற்சி பயிற்சியாளரும் ஆவார். தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் பல இலங்கையர்களுக்கு அவர் ஊக்கமளிக்கிறார். மற்றும் ருக்ஸலா அவருடைய தினசரி உடற்பயிற்சி பற்றிய விடயங்களை பகிர்வதன் மூலம் தன்னைப் பின்பற்றுபவர்களை ஊக்கத்துடன் வைத்திருக்கிறார். அத்தோடு இன்ஸ்டாகிராமில் 43.9k ஆயிரத்திற்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்கின்றனர். மற்றும் அவரது நேர்மறையான மனநிலை மற்றும் ஆரோக்கியமான கட்டுடல் மூலம் தினசரி தன்னுடைய பார்வையாளர்களை கவர்ந்திழுக்கின்றார்.

முடிவுரை

இதோ நீங்கள் மிகச்சிறந்த 25 இலங்கை கட்டுடல் உடற்தகுதி ஜாம்பவான்களின் பட்டியலை பெற்றுள்ளீர்கள். உடற்பயிற்சி இலக்குகள், புதுப் பயிற்சிகள், உடற்தகுதி குறிப்புகள், உடற்பயிற்சி நுட்பங்கள், மற்றும் உணவுக் குறிப்புகளை பெற்றுக்கொள்ள இங்கே குறிப்பிடப்பட்ட கட்டுடல் உடற்பயிற்சி வல்லுனர்களை நீங்கள் பின்தொடர முடியும். உங்களுக்குப் பிடித்த உடற்பயிற்சி ஜாம்பவான்களை இந்த பட்டியலில் கண்டுபிடித்திருப்பீர்கள் என எதிர்பாக்கிறோம்!

நண்பர்களே! நாங்கள் பட்டியலில் எந்த இலங்கை உடற்தகுதி வல்லுனர்களையாவது குறிப்பிட தவறியிருந்தால்,  அவர்களை கீழே குறிப்பிடுங்கள்!

Tags: Sri Lankan Fitness InfluencersSri Lankan fitness modelsSri Lankan personal trainer

Discussion about this post

ADVERTISEMENT
  • About
  • Forum
  • Contact
  • Privacy Policy
  • Terms and Condition
© 2023 Justfit.lk - All rights Reserved.
No Result
View All Result
  • Forums
  • Contact

Welcome Back!

Sign In with Facebook
Sign In with Google
Sign In with Linked In
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist